சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த பாடசாலைகளே சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் பெற்றோரின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்டதாகவும் பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பல அதிபர் மற்றும் ஆசியரியர் சங்கங்கள், இன்று பாடசாலைக்கு சமுகமளிப்பதாகத் தெரிவித்துள்ளன.

Related Posts