தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோதே மாவட்ட நீதிவான் நீதிமன்றபதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் ஐவர் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.