சுமந்திரன் வடக்கு முதலமைச்சராக வேண்டும்! சிறிதரன்

எம்.ஏ.சுமந்திரனின் சேவை தமிழ் மக்களுக்கு தேவை அவர் பொறுமையாக இருந்து வடமாகாணசபை முதல்வராக வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

நேற்று (17) வவுனியாவில் நடந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தின் போது, சிறிதரன் இதனை தெரிவித்தார்.

சுமந்திரன் அவசரப்படக்கூடாது. அவரது சேவை தமிழ் மக்களுக்கும், கட்சிக்கும் தேவை. சம்பந்தன் ஐயா சொன்னதை போல, எல்லாம் மடியில் வந்து தானாக விழும். அடுத்த ஆறு மாதங்களுக்குள் வடமாகாணசபை தேர்தல் வரும் அதற்கு எமக்கு பொருத்தமான முதலமைச்சரும் தேவை சுமந்திரன் பொறுமையாக இருந்தால் எல்லாம் தானாக அமையும் என்றார்.

Related Posts