சுமந்திரனின் கருத்துக்கு அரச மருத்துவர் சங்கம் பதிலடி

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மிக மோசமாக செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அரச மருத்துவர் சங்க தரப்பில் வினவிய போது மருத்துவர்களின் இறுதி வேலை நிறுத்தம் வெள்ளை வான் கொண்டு மருத்துவ மாணவ தலைவர் ஒருவரை கடத்த முயன்றமைக்கு எதிரானதாகும்
எனினும் அவர்களுக்கு வெள்ளைவான் கடத்தல் பழகிப் போன ஒரு விடயம் .  தான் சார்ந்த சமுதாயம் வெள்ளைவான் கலாசாரத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதினை இவர் மறந்து போய் அவ்வாறான ஒரு செயலுக்கு குடைபிடிக்கும் கருத்துக்களை தெரிவித்திருப்பது மிகவும் மனம் வருந்தத்தக்கது . மேலும் இவர் வாய் மூடி மௌனியாய் இருப்பதுபோல அரச மருத்துவர்களையும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மிகவும் கேவலமானது என்றே நாம் கருதுகின்றோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts