விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் கேரளாவை சேர்ந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதலிடத்தை வென்றார். விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சுப்பர் சிங்கர்’. இந்நிகழ்ச்சி இறுதிச்சுற்று சென்னையில் நேற்று நடைபெற்றது.
சுப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜகணபதி, சியாத், ஆனந்த், லட்சுமி என ஐந்து பேர் போட்டியிட்டனர். இவர்களில் பரீதாவும், ராஜகணபதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்ற மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். பரீதா, ஆனந்த், சியாத் ஆகிய போட்டியாளர்களுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தின் ‘பிரமாண்ட குரலுக்கான தேடல்’ என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் பாடகர்கள் மற்றும் தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி, சென்னை டி.பி. ஜெயின் கல்லூரியில் 6 மணி முதல் நடைபெற்று இரவு 12 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று தாமதமாக 12.45 மணி அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதல் இடத்தை பிடித்தார். முதல் இடத்தை பிடித்த ஆனந்த் அரவிந்தாக்ஷுக்கு 75 லட்சம் இந்திய ரூபா மதிப்புள்ள இல்லம் பரிசாக வழங்கப்பட்டது. பரீதா, இரண்டாம் இடத்தை பிடித்தார் இவருக்கு 10 லட்சம் இந்திய பரிசு வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை பிடித்த ராஜ கணபதிக்கு 5 லட்சம் இந்திய ரூபா பெறுமதியான பரிசு வழங்கப்பட்டது. நான்காம் இடத்தை பிடித்த லட்சுமிக்கு மூன்று லட்சமும், ஐந்தாம் இடத்தை பிடித்த சியாத்க்கு இரண்டு லட்சம் பரிசு வழங்கப்பட்டன.