சுப்பர்மடம் அனர்த்த எச்சரிக்கை கோபுரம் மக்கள் பாவனைக்கு

யாழ். பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் கடந்த 2 வருடங்களாக முற்றாக சேதமடைந்து காணப்பட்ட அனர்த்த எச்சரிக்கை கோபுரம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று சனிக்கிழமை விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட அதிகாரி சங்கரப்பிள்ளை ரவி தெரிவித்தார்.

பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் கடந்த 2 வருடங்களாக முற்றாக சேதமடைந்து காணப்பட்ட இவ் அனர்த்த எச்சரிக்கை கோபுரம் 62 இலட்சம் ரூபா செலவில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் புனரமைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

யாழ். மாவட்டத்தில் 8 அனர்த்த எச்சரிக்கை கோபுரங்கள் உள்ளன. மணற்காடு, நெடுந்தீவு, வல்வெட்டித்துறை, சுப்பர்மடம், உடுத்துறை ஆகிய பகுதிகளிலுள்ள 5 எச்சரிக்கை கோபுரங்கள்; சூரியகதிர் மூலமும் மருதங்ககேணி, காரைநகர், ஊர்காவற்றுறை ஆகிய பகுதிகளிலுள்ள 3 எச்சரிக்கை கோபுரங்கள் மின்சாரத்திலும் இயங்குவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.

Related Posts