சுன்னாக பொலிசாருக்கு எதிராக சுன்னாக பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலளர்கள் இருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அது தொடர்பில் தெரியவருவதாவது ,
உடுவில் மகளீர் கல்லூரியில் அதிபர் மாற்றத்திற்கு எதிராக கடந்த 3ம் திகதி தொடக்கம் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றய தினம் பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீள ஆராம்பமானது.
அதன் போது பாடசாலைக்கு வருகை தந்த மாணவிகளை பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து புதிய அதிபரின் தலைமையில் , அவருக்கு ஆதரவான ஆசிரியர்கள் கலந்துரையாடல்களை நடாத்தி இருந்தனர்.
அதில் இருந்து சில மாணவிகள் வெளியேறி தமது பெற்றோருடன் வீடு செல்ல முற்பட்டனர். அதனை அங்கு கடமையில் இருந்த சுன்னாக பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
பொலிசார் தடுத்து நிறுத்திய போதும் பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்து சென்றனர். அதனை அடுத்து மாணவிகளை சுன்னாக பொலிசார் வீடியோ எடுத்திருந்தார்.
பொலிசார் வீடியோ எடுப்பதனை , மாணவிகளின் பெற்றோர் தடுக்க தடுக்க பொலிசார் வீடியோ எடுத்தனர்.
இவ்வாறு பொலிசார் பெற்றோர் தடுக்க தடுக்க மாணவிகளை வீடியோ எடுப்பதனை அங்கிருந்த இரு ஊடகவியலாளர்கள் , வீடியோ எடுத்தனர்.
அதனை அடுத்து போலீசாரை வீடியோ எடுத்த இரு ஊடகவியலாளர்களையும் பொலிசார் தள்ளி விட்டதுடன் , புகைப்பட கருவியை தட்டி விட்டதுடன் , உங்கள் இருவரையும் கைது செய்வேன் என மிரட்டி இருந்தனர்.
இது தொடர்பில் சுன்னாக பொலிஸ் நிலையத்தில் இரு ஊடகவியலாளர்களும் முறைப்பாடு பதிவு செய்தனர். அதில் தமது ஊடகபணிக்கு இடையூறு விளைவித்தமை , மிரட்டியமை தொடர்பில் குறிப்பிட்டு இருந்தனர்.