Ad Widget

சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய கழிவுகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நிலத்தில் கலக்கப்பட்டிருந்தமை தொடர்பில் உடுவில் பிரதேச செயலர் நந்தகோபன் தலைமையில் 9 பேர் கொண்ட ஆய்வுக் குழுவொன்றை அமைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்விடயம் தொடர்பில் விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும்படியும், மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் அவதானஞ் செலுத்தி அதனையும் அவ் அறிக்கையுடன் இணைக்குமாறும் பணித்துள்ளார்.

es01

இக்குழுவில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மத்திய சூழல் அதிகார சபை உட்பட துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் நிபுணர்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை, சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திற்கு நேற்று புதன்கிழமை (20), அமைச்சர் அவர்களுடன் உடுவில் பிரதேச செயலர் ஏனைய துறைசார் அதிகாரிகள், கிராம சேவையாளர், பேராசிரியர்கள் மண்வள நீர் வள ஆய்வாளர்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

es05

ஏற்கனவே இவ்விடயம் தொடர்பில் உடுவில் பிரதேச செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts