சுன்னாகம் மின் உப நிலையம் அடுத்த மாதம் முதல் இயங்கும் – மின்சக்தி எரிசக்தி அமைச்சு

ceylon_electricity_boardசுன்னாகம் மின் உப நிலையத்தின் ஊடாக யாழ். குடாநாட்டுக்கு மின்சாரத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுன்னாகம் மின் உப நிலையத்திலிருந்து 63 மெகாவொட் மின்சாரம் யாழ். குடாநாட்டிற்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் வீடுகளில் வாழும் மக்கள் நன்மை அடைவார்கள் எனவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுன்னாகம் கிரீட் மின் உப நிலையம் இயங்கும் பட்சத்தில் யாழ். குடாநாட்டின் மின்சக்தி தேவையை முழுமையாக நிறைவேற்ற முடியும் என மின் சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts