சுன்னாகம் மின்நிலைய புகையினால் மக்கள் பாதிப்பு

factory-smoke-polluting-airசுன்னாகம் பகுதியில் உள்ள மின்சார நிலையத்தில் இருந்து வெளியேறும் புகையினால் பொதுமக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.

சுன்னாகம் மின்சார நிலையத்தில் அண்மைக்காலமாக பாரிய மின்பிறப்பாக்கிகள் பொருத்தப்பட்டு யாழ். குடா நாட்டுக்கான மின்சார விநியோகம் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த மின்பிறப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் புகைகள் சுமார் எண்பது அடிக்கு மேற்பட்ட உயரத்தில் குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றபோதிலும் காற்று உள்ள காலங்களிலும் சரி காற்று அற்ற காலங்களிலும் சரி மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி மக்களுடைய வீடுகளின் மேல் கரித்துகள் கொட்டுவதும், இதனால் உடைகள் முதல் ஏனைய பொருட்கள் பாதிக்கப்படும் நிலைமையும் காணப்படுகின்றது.

இதனைவிட புகையுடன் ஒருவகையான மணமும் கூட எழுவதினால் இதனை சுவாசிப்பதினால் பொதுமக்கள் நோய்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் உள்ளாகும் நிலமை ஏற்படலாம் என அந்தப் பகுதியில் உள்ள வைத்தியர்கள் தொவித்துள்ளதாகவும் அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.

யாழ். மாவட்ட சுற்றுச் சூழல் அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக தொடர்பு கொண்டதாகவும் குறிப்பிட்ட மின் நிலையத்திற்கான அனுமதி கொழும்பில் இருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தாம் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related Posts