சுன்னாகம் மின்சார நிலைய பகுதியில் கழிவு நீர்; அதிகாரிகள் பாராமுகம் என்கின்றனர் மக்கள்

chunnakam-elect-ebசுன்னாகம் மின்சார நிலையப் பகுதியின் பின்புறத்தில் கழிவு நீர் தேங்குவதனால் அயலில் உள்ள தாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனையிட்டு உரிய அதிகாரிகள் எந்த வகையான நடவடிக்கைகளம் எடுக்கவில்லையெனத் தெரிவிக்கின்றார்கள்.

சுன்னாகம் மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி பொது மக்கள் நிறைந்து வாழும் பகுதியில் காணப்படுகின்றது. இந்த நிலையில் நான்கு புறமும் மக்களின் குடியிருப்பக்களால் சூழ்ந்திருக்கும் இந்த பகுதியில் கழிவு நீர் தேங்குவதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனால் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இது குறித்து மக்கள் தெரிவிக்கையில்,

மின்சார நிலையப் பகுதியில் வாழ்ந்து வரும் நாங்கள் அந்தப் பகுதியில் கழிவு நீர் தேங்குவதனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம். எமக்கு சுகாதாரப் பிரச்சினை காணப்படுகின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாம் பலமுறை அறித்திருந்த போதும் நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கவில்லை.

இதேவேளை , சுகாதார நடவடிக்கைகளை கூடியகவனம் எடுக்க வேண்டியதேவையும் மின்சார சபைக்கும் உண்டு. அதேபோல சுற்றுச் சூழல் அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகாகள் எனப்பலருக்கும் உண்டு. எனினும் அவர்கள் இது குறித்து நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை.

குறிப்பாக மின்சார சபையின் மேற்குப் புறத்தில் உள்ள புகையிரதப் பாதைக்கு அருகாமையில் வாய்க்கால் வெட்டி குடிமனைகளுக்கு அருகில் கழிவு நீர்விடப்பட்டு வருகின்றது.

இதனால் கழிவு நீர் வாயக்காலில் சுமார் இரண்டு அடி வரை தேங்கிக் காணப்படுவதுடன் துர்நாற்றம் வீசுதல் மற்றும் நுளம்புகளின் பெருக்கம் என்பனவும் காணப்படுகின்றது.

அத்துடன் இந்த கழிவு வாய்க்காலை மூடி புதர்கள் வளர்ந்துள்ளமையால் பாதசாரிகள் வாய்க்காலுக்குள் விழக்கூடிய நிலமையும் ஏற்படுகின்றது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்பதாகவும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

சுன்னாகம் மின்நிலைய புகையினால் மக்கள் பாதிப்பு

Related Posts