சுன்னாகம் நீர் பிரச்சினை : அனைத்து கட்சிகளிடம் ஹக்கீம் கோரிக்கை

சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பில் வெகுவிரைவில் தீர்வினை முன்வைப்பதற்கு நீர் வழங்கல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில் இதற்கான ஒத்துழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார்.

கடந்தக்காலங்களில் இந்த பிரச்சினையினை ஒரு சிலர் அரசியல் சுயநலனின் அடிபடையில் கையாண்டமையே அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாக காரணம் எனவும் இதன் போது சுட்டிகாட்டினார்.

Related Posts