சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை முறையான அறிக்கையின்றி ஒத்திவைப்பு!

சுன்னாகம் நிலத்தடி நீர் அருந்தக்கூடியதா? இல்லையா? என்பது தொடர்பாக இதுவரை முறையான அறிக்கையெதுவும் சமர்ப்பிக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் நீதிமன்றில் நடைபெற்றது.

இதன்போது, பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, சுன்னாகம் நிலத்தடி நீரினை அருந்தலாமா? அல்லது அருந்தக்கூடாதா? என்பது தொடர்பில் இதுவரை முறையான அறிக்கையெதுவும் தம்மிடம் சமர்ப்பிக்கப்படவில்லையென சுன்னாக நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த வழக்கு விசாரணையானது எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Posts