சுன்னாகம் நிலத்தடி நீர் வழக்கு விசாரணை அறிக்கையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டுள்ளது எனத் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கவேண்டுமென வடமாகாண பிரதம செயலாளருக்கு மல்லாக நீதிமன்ற நீதவன் ஏ.யூட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் முன்னிலையாகவேண்டிய அவசியமில்லை எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கழிவொயில் கலப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் வழங்கப்படுவதில்லையென பாதிக்கப்பட்ட பகுதிகளிலிலுள்ள இரண்டு சுகாதாரப் பரிசோதகர்களால் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்hளர்.

Related Posts