சுன்னாகம் நகர மத்தியிலுள்ள இராணுவத்தினர் தாம் தங்கியுள்ள பொதுமக்களின் வீடுகளிலிருந்து இம்மாத இறுதியில் வெளியேறவுள்ளதுடன், பொது மக்களது வீடுகளையும், உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக அப்பகுதி கிராம அலுவலர் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் நகரமத்தி J/198 கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் குறித்த வீடுகளின் உரிமையாளர்களுக்கும், சுன்னாகம் இராணுவ பொறுப்பதிகாரிக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் நகரப்பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள வீடுகளின் உரிமையாளர்கள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு காணி உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு வருகைதருமாறு சுன்னாகம் நகர் மத்தி கிராம அலுவலர் அறிவித்துள்ளார்.
சுன்னாகம் நகர மத்தியில் காங்கேசன்துறை வீதியில் சுமார் 14 வீடுகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.