சுன்னாகம் மயிலணிப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் தாய், மகள் மற்றும் பேத்தி ஆகியோரே வசித்து வருவதாகவும் ஏனையவர்கள் வெளிநாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.