சுன்னாகத்தில் பெண்கள் இருவரை காணவில்லை

missing personசுன்னாகம் பொலிஸ் பகுதியில் இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது.

மல்லாகம் கோட்டைக்காட்டுப் பகுதியில் உள்ள 16 வயதான மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து வீட்டில் இருந்து வெளிச் சென்றவர் திரும்பி வரவில்லையென முறையிடப்பட்டுள்ளது.

இதே வேளை சுன்னாகம் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவர் தான் வீட்டில் இருந்து சுகயீனம் காரணமாக வெளியேறுவதாகக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றவரும் காணமால் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் சம்பந்தமான விசாரனைகளை பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Posts