சுன்னாகத்தில் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல்

ctb_busஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது சுன்னாகம் பஸ் தரிப்பிடத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துக்கொண்டிருந்த பஸ் மீதே இவ்வாறு இன்று காலை 7.45 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் சுன்னாகம் பஸ் தரிப்பிடத்தில் நின்ற மாணவர்களை ஏற்றுவதற்று மறுத்தபோதே பஸ்ஸை வழிமறித்த மாணவர்கள் குறித்த பஸ்ஸின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts