சுன்னாகத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் பணம் கொள்ளை

யாழ்.சுன்னாகம் பகுதியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் பணத்தினை மூவரடங்கிய கொள்ளைக்குழு கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது. சுன்னாகம் சூராவத்தை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்று உள்ளது.

குறித்த இரு ஊழியர்களும் தமது நிறுவனத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்து சென்ற போது சூராவத்தை பகுதில் முகத்தை மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்திருந்த மூவர் ஊழியர்களை மறித்து தாக்கி விட்டு அவர்களிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்நிலையத்தில் செய்யபட்டு உள்ள முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts