சுன்னாகத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி காவலாளியிடமிருந்து பணம், நகை கொள்ளை!

யாழ்.சுன்னாகம் பகுதியில் காவலாளியை கத்தியைக் கொண்டு மிரட்டி அவரிடமிருந்த பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது.

சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள கால் நடை மருத்துவ மனையில் காவலாளியாக கடமையாற்றுபவரிடமிருந்தே நேற்று (புதன்கிழமை) நகை, பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டன.

நேற்று அதிகாலை கால் நடை மருத்துவ மனைக்குள் அத்துமீறி உள்நுழைந்த 4 பேரே கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Posts