சுந்தர் சி.யின் பிரமாண்டத்தில் ஜெயம் ரவி, ஆர்யா

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ரஜினியின் எந்திரன் 2-வான ‛2.O’ மற்றும் பாகுபலி-2 படங்கள் தான். தற்போது இந்தப்படங்களையும் மிஞ்சும் வகையில் ஒரு படம் உருவாக உள்ளது. தேனாண்டாள் பிலிம்சின் 100வது படமாக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படத்திற்கு ‛சங்கமித்ரா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதை சுந்தர்.சி இயக்கயிருப்பது அனைவரும் தெரிந்ததே.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் அந்த படத்தை சரித்திர பின்னணி கொண்ட கதையில் இயக்குகிறார் சுந்தர்.சி. இந்த படத்தில் விஜய்யை நடிக்க வைக்கும் முயற்சி முதலில் நடந்தது. ஆனால் அவர் மறுத்து விடவே, பின்னர் சூர்யாவிடம் கால்சீட் கேட்டனர். அவரும் பிடிகொடுக்கவில்லை. அதையடுத்து ஜெயம் ரவியிடம் பேசினர், அவர் சம்மதம் சொல்லிவிட்டார். இப்போது அவருடன் நடிகர் ஆர்யாவும் நடிக்க இருக்கிறார். இதை தேனாண்டாள் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதைப்பற்றி தேனாண்டாள் பிலிம்ஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், ‛‛எங்களது அடுத்தப்படமான ‛சங்கமித்ரா’ படத்தை சுந்தர் சி இயக்குகிறார். ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கிறார்கள், ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்” என அறிவித்துள்ளது.

Related Posts