சுந்தர்.சி படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கப் போறாரா?

சுந்தர்.சி இயக்கும் சரித்திரப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். ஒருபுறம் இப்படத்திற்கான நடிக, நடிகையரைத் தேடி வரும் சுந்தர்.சி மறுபுறம் திரைக்கதையை விறுவிறுப்பாக எழுதி வருகிறார்.

sundarc-rahman

சூர்யா, மகேஷ்பாபு, விஜய் என்று கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கப் போவதாக கூறினாலும்,படத்தின் ஹீரோ யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதுவரை சுந்தர்.சியின் எந்தவொரு படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் குறித்த முழுமையான தகவல்களை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts