சுந்தர்.சி இயக்கிய அரண்மனை…இன்னொரு மதகஜராஜா படமா?

சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்த பேய்ப்படம் – அரண்மனை. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்குத் தயார்நிலையில் உள்ளது. கடந்த மாதம் வெளியாகவிருந்த படங்களின் பட்டியலில் அரண்மனை படத்தின் பெயரும் இருந்தது. ஆனால் ஏனோ அப்படம் வெளியாகவில்லை.

hansika_2

அரண்மனை படத்தின் இயக்குநரான சுந்தர். சியோ விஷாலை வைத்து அடுத்தப் படத்தை தொடங்கிவிட்டதோடு, அப்படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார். தற்போது கும்பகோணத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அரண்மனை படத்தின் ரிலீஸ் பற்றி கவலைப்படாமல் சுந்தர்.சி. அடுத்தப்படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டதை வைத்து, மீண்டும் மதகஜராஜா சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டது என்று கமெண்ட் அடிக்கின்றனர் திரையுலகைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் இப்படி சொல்ல என்ன காரணம்?

விஷாலை வைத்து மதகஜராஜா படத்தை இயக்கியபோதும் இப்படித்தான் நடந்தது. மதகஜராஜா வெளி வருவதில் பிரச்சனை ஏற்பட்டதால் அதை கண்டுகொள்ளாமல் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை இயக்கப்போய்விட்டார் சுந்தர்.சி. அவர் தலையிடாமல் ஒதுங்கிக்கொண்டதால் கடைசி அந்தப்படம் வெளிவரவே இல்லை. அரண்மனை படத்துக்கும் அந்த நிலை ஏற்படாமல் இருக்கணும்!

Related Posts