சுத்தமான நீர் கேட்டு சுன்னாகத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

கழிவு எண்ணெய் கிணறுகளில் பாதிக்கப்பட்ட வலி.வடக்குப் பிரதேச மக்கள் நேற்று காலை 8.30 மணி தொடக்கம் சுன்னாகம் மின் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

சுன்னாகத்தில் அமைந்துள்ள ‘நொதேர்ன் பவர்’ அனல் மின் நிலையம் கழிவு எண்ணெயை நிலத்தின் கீழ் செலுத்தியமையால் சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம், உடுவில் பிரதேச மக்களின் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்தது. இந்தக் கழிவு எண்ணெய் நீரைப் பயன்படுத்தினால் தோல் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய், மலட்டுத்தன்மை, குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதுடன் வேறு பல நோய்கள் ஏற்படும் என சுகாதாரப் பகுதியினர் எச்சரித்தனர்.

ஆனால் இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசியல்வாதிகளோ, அரச உயர் அதிகாரிகளோ கண்டு கொள்ளவுமில்லை. நடவடிக்கை எதுவும் எடுக்கவும் இல்லை. இதனைக் கண்டித்தும், இந்தப் பிரச்சினைகள் குறித்து உடனடிக் கவனம் எடுக்குமாறு கோரியுமே மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறிதரன் வட மாகாண சபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன், பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Related Posts