சுதுமலையில் கைக்குண்டுகள் மீட்பு

Hand-bombசுதுமலை தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக்காணியில் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சுதுமலை தெற்கு, ஆச்சாரி காளி கோவிலடி பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றின் உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யதபோது, அங்கு நான்கு கைக்குண்டுகள் இருப்பதை கண்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம்பேட் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மானிப்பாய் பகுதி இராணுவத்தினர் இணைந்து இந்த நான்கு கைக்குண்டுகளையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட நான்கு கைக்குண்டுகளும் இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts