சுதந்திரதினத்திலும் மக்கள் போராடவேண்டியுள்ளது!

நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

கேப்பாபுலவு – புலவுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம்மக்களின் பிரச்சினை தொடர்பில், விமானப்படையினரிம் கலந்துரையாடுவதற்காக, வட மாகாண முதலமைச்சர் படை முகாமுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts