சுதந்திரக் கட்சியின் அழைப்பும் நிராகரிப்பும்: தயா மாஸ்டர்

thaya-masterநடைபெறவுள்ள மகாணசபைத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் பேச்சாளருமான தயா மாஸ்டர் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதனை தயா மாஸ்டரும் அறிவித்திருந்தார். இன்நிலையில் சுதந்திரக்கட்சியின் வெட்பாளர் பெயர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை.

இது தொடர்பில் தயாமாஸ்டர் பிபிசி வானோலிக்கு அளித்த பேட்டியில்

”இறுதி நேரம் வரை பட்டியலில் தமது பெயர் இடம்பெறுமென்றே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை எனவும் கூறிய அவர் ஆளும் சுதந்திரக் கட்சியின் அழைப்பின் பேரிலேயே தாம் அக்கட்சியின் உறுப்புரிமையை பெற்று தேர்தலில் போட்டியிட முன்வந்ததாகவும், தற்போது தனது வேட்பாளர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் அக்கட்சியில் இருக்கவே விரும்புவதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்தார்.

சுயேட்சைக் குழுவாக போட்டியிடும் எண்ணமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related Posts