யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்த நபர் இன்று காலை பொலிஸில் சரணடைந்தார். இவர் நல்லூரை சொந்த இடமாக கொண்ட சிவராஜா ஜெயந்தன் 39 வயது இவரிடம் மேற்கொண்ட பொலிஸ்விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கையில்,
நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். நான் சும்மா அவரது பிஸ்டலை எடுத்தேன். அது சுடுபட்டு விட்டது. எனக்கு எந்த பின்புலமும் இல்லை.
இவ்வாறு சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை 2012 ஆம் ஆண்டு கோப்பாயில் இடம்பெற்ற கொலை சம்பவமொன்றின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். அத்துடன் இவர் முன்னாள் புலி உறுப்பினர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
தொடர்புடைய செய்தி
http://www.e-jaffna.com/archives/84678