தனது பெயரில் ட்விட்டரில் வெளியான பிரபலங்களின் கசாமுசா புகைப்படங்கள், வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாடகி சுசித்ரா.
பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
என் குடும்பத்தார், நண்பர்கள், திரையுலக பிரபலங்களுக்கு தொல்லை ஏற்பட்டதை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் ட்விட்டர் கணக்கில் யாரோ கண்டதை எல்லாம் வெளியிட்டுள்ளார்கள்.
பிப்ரவரி 19ம் தேதி தான் என் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை தெரிந்து கொண்டேன். சுசிலீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் ஏகப்பட்ட ட்வீட்டுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின.
ட்விட்டர் இந்தியா தலைவரை தொடர்பு கொண்டு என் கணக்கை முடக்கினோம். இது குறித்து சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. மார்ச் 2ம் தேதி எல்லாம் சரியாகிவிட்டது.
ட்விட்டரில் என் கணக்கிலும், என் பெயரிலும் வெளியானவற்றால் வெட்கப்பட்டேன். அந்த ட்வீட்டுகளை நான் போடவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
சுசிலீக்ஸால் பாதிக்கப்பட்டவர்களை நினைத்து வருந்துகிறேன். நடந்ததற்கு பொறுப்பேற்கிறேன் மேலும் ட்வீட்டுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சாரி. இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்பதால் அதை நான் தான் செய்தேன் என்று அர்த்தம் இல்லை என்றார் சுசித்ரா.