சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுடன் புகையிரத சேவைகள்!!

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி இன்று தொடக்கம் காலை, மாலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பிரதேசங்கள் அடையாளப்படுப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பிரதேசங்களில் புகையிரத சேவைகள் மறு அறிவித்தல் விடுக்கும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய பிரதான புகையிரத பாதையில் உள்ள தெமட்டகொடை, களனி, வனவாச, ஹெந்தரமுல்ல உப புகையிரத நிலையம், ஹோரபே உப புகையிரத நிலையம் மற்றும் றாகம,வல்பொல உப புகையிரத நிலையம், படுவத்த உப புகையிரத நிலையம் ஆகியற்றிலும்,

புத்தளம் புகையிரத வீதியில் பெரலந்த உப புகையிரத நிலையம், ஜா – எல ,குருஸ,குரன உப புகையிரத நிலையம் மற்றும் மீகமுவ,கவ்டுவ உப புகையிரத நிலையத்திலும், புகையிரதம். நிறுத்தப்படமாட்டாது

கரையோர புகையிரத பாதையில் உள்ள பாணந்துரை ஆகிய புகையிரத நிலையங்களில் புகையிரதம் நிறுத்தப்படமாட்டாது என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட நிலையில் அத்தீர்மானம் பின்னர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய பாணந்துறை மற்றும் பின்வத்த ஆகிய புகையிரத நிலையங்களில் வழமையை போன்று புகையிரதம் நிறுத்தப்படும்.

களனி வழி புகையிரத பாதையில் உள்ள பேஸ்லைன், கொட்ட ரோட் ஆகிய புகையிரத நிலையங்களிலும், குருநாகலை புகையிரத நிலையத்திலும் புகையிரதங்கள் மறு அறிவித்தல் விடுக்கும் வரை நிறுத்தப்படமாட்டாது.

புகையிரத நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக கடைப்பிடிப்பது பயணிகளின் கடமையாகும் என்றும் அவர் கூறினார்.

Related Posts