சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு சீல்

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்- மாநகரசபை சுகாதர பரிசோதகர்களால், சபை எல்லைக்கு உட்பட்ட குருநகர், வண்ணார்பண்ணை மற்றும் யாழ்.நகர் பகுதிகளிலுள்ள உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது ஏழு உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதனை கண்டறிந்து, அதற்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் சுகாதர பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கினை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தியபோது, உரிமையாளர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து உணவக உரிமையாளர்களுக்கு தலா ஒரு இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதவான், உணவகங்களின் சீர்கேடுகளை நிவர்த்தி செய்த பின்னர் சுகாதார பரிசோதகர்களின் அறிக்கை நீதிமன்றுத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அதுவரை உணவகங்களுக்கு சீல் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்

Related Posts