‘சுகவாழ்வை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் ‘சுகவாழ்வை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்றுமருத்துவக் கண்காட்சி 21.05.2012 பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடத்தப்படவுள்ளது.யாழ். பல்கலைக்கழக மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியினை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுவன
——————————————————————

*சுவாசத்தொகுதி
*சமிபாட்டுத் தொகுதி
*குருதிச் சுற்றோட்டத் தொகுதி
*அகம் சுரக்கும் தொகுதி
*சிறுநீரகத் தொகுதி
*வன்கூட்டுத் தொகுதி
*புற்றுநேயியல்
*தடயவியல் மருத்துவம்
*தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள்
*குழந்தை மருத்துவம்
*இனப்பெருக்கத் தொகுதி
*நரம்புத் தொகுதி
*உள மருத்துவம்

ஆகிய பிரிவுகள் இக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன இவை நவீன தொழில் நுட்பம் முறை மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் இவற்றுக்கான போதிய விளக்கங்கள் வழங்கப்படவுள்ளது.இதனை பாடசாலை மாணவர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இக்கண்காட்சியினைப் பார்வையிட முடியுமென யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் அறிவித்துள்ளது.

Related Posts