சுகபோகமாக வாழ்ந்த வலி.வடக்கு மண்ணை விட்டு வெளியேற இராணுவத்தினர் விரும்பவில்லை!

இராணுவத்தினர் வலி.வடக்கு மண்ணில் நீண்டகாலம் உண்டு, உறங்கி வாழ்ந்து விட்டனர். தாங்கள் சுகபோகமாக வாழ்ந்த அந்த மண்ணை விட்டு வெளியேற இராணுவத்தினர் விரும்பவில்லை. – இப்படித் தெரிவித்திருக்கிறார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் – நல்லூர் சங்கிலியன் தோப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொணடு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு வற்புறுத்த முடியவில்லை. இதனால்தான் வலி. வடக்கில் மக்களை மீளக்குடியமர்த்த முடியாது உள்ளது. எனினும் இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts