கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் பஞ்சாட்சரம் கணேசனை மாற்ற வேண்டாம் எனக்கூறி பாடசாலை சமூகத்தினரால் இன்று காலை 7 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
“சீ.வீ.கே உறவினருக்காக பாடசாலையை சீரழிக்காதே”, ” வடமாகாண முதல்தர பாடசாலையை சீரழிக்காதே”, “வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு கொக்குவில் இந்துவின் வளர்ச்சி பிடிக்கவில்லை”, “வேண்டும் வேண்டும் இந்த அதிபர் எமக்கு வேண்டும் ” போன்ற கோசங்களையும் முன்வைத்திருந்தனர்.
இக் கண்டண ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள், பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்புகளை வெளியிட்டனர்.