தமது பூர்வீக நிலத்தை கையளிக்குமாறு கோரி கடந்த 8 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களை 24 மணிநேரமும் ராணுவம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது
முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ராணுவ முகாமுக்கு முன்னால் சீ.சீ.ரி.வி. கமராவை பொருத்தி போராட்டக்காரர்களையும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருபவர்களையும் ராணுவம் கண்காணிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேப்பாப்பிலவில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி 135 குடும்பங்கள் கடந்த முதலாம் திகதி தொடர் அறவழிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதோடு, இவ்விடயம் தற்போதைய நாடாளுமன்ற அமர்வுகளிலும் தமிழ்த் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.