சீவலப்பேரி பாண்டி இரண்டாம் பாகத்தில் கமல்?

சீவலப்பேரி பாண்டி படம் நினைவிருக்கிறதா? நடிகர் நெப்போலியன் ஹீரோவாகக் களமிறங்கி கலக்கிய படம்.

நெல்லையில் உள்ள சீவலப்பேரி என்ற கிராமத்தில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் இது. ரிவியில் தொடராக வந்தபோது கிடைத்த வரவேற்பைப் பார்த்து திரைப்படமாக எடுத்தனர்.

பாண்டி என்ற அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் நெப்போலியன். அச்சு அசலான அவரது நெல்லைத் தமிழ் உச்சரிப்பும், வெகுளித்தனமும் பாசமும் ஆக்ரோஷமும் மிக்க நடிப்பும் ரசிகர்களின் இதயங்களை வென்றன. நெப்போலியனுக்கு இந்தப் படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இயக்கியவர் பிரதாப் போத்தன்.

kamal-haasanjpg

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார்களாம். முதல் பாகத்தைத் தயாரித்த பிஜி ஸ்ரீகாந்தே இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க்ப போவதாகக் கூறுகிறார்கள்.

இப்படத்தை கவுதம் மேனன் இயக்குகிறாராம். கமல்ஹாஸன் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை எழுதிய சௌபாதான் இரண்டாம் பாகத்தின் கதை வசனத்தையும் எழுதவிருக்கிறார்.

Related Posts