இலங்கைக்கு அண்மையில் விட்டுவிட்டு வீசும் கிழக்கு நோக்கிய காற்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் முகில் மூடிய வானம் காணப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் விட்டுவிட்டுப் பெய்யும் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் இடையிடையே ஆலங்கட்டி வீழ்ச்சியும் காணப்படும்.
மேலும் இடியுடன் கூடிய தூறல் மழையின்போது சில இடங்களில் மையங்கொண்ட பலமான காற்று காணப்படும்.
கிழக்கு மற்றும் தென்கிழக்கு கரைகளுக்கு அப்பால் கடலில் விட்டுவிட்டு பெய்யும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
இடையிடையே கடல் கொந்தளிப்பாகக் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.