சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு!!

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை மீண்டும் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி 2,850 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து 50 கிலோகிராம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூபா 3,000 என சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts