சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் புலிப்பார்வை. இப்படத்தில் பாலசந்திரன் ஆயுதம் ஏந்தி போராடுவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் செய்திகள் வெளியானதில் இருந்தே, கத்தியைத் தொடர்ந்து, புலிப்பார்வைக்கும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.

seeman

இந்த நிலையில், நேற்று முன்தினம் புலிப்பார்வை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சீமான், பச்சைமுத்து, ப்ரவீன்காந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் பச்சைமுத்து பேசவரும்போது, திடீரென்று தியேட்டருக்குள் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்கள். விடாதே விடாதே புலிப்பார்வையை வெளியிடாதே என்று எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது, சீமானின் நாம் தமிழர் கட்சித்தொண்டர்களும், பச்சைமுத்துவின் ஐஜேகே தொண்டர்களும் அதிரடியாக பாய்ந்து அந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதையடுத்து போலீசார் புகுந்து அந்த மாணவர்களை மீட்டு அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இந்த மேடையில் சீமான் பேசும்போது, எங்களை எதிர்க்கும் எல்லோருமே எங்களது எதிரிகள் அல்ல. மாற்று கருத்து கொண்டவர்களை நாங்கள் வெறுப்பவர்களும் அல்ல. அவர்களையும் நம்மவர்களாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். சுப்பிரமணியசாமியை விட எங்கள் கருத்துக்கு மாற்று கருத்துடையவர் யாருமே இருக்க முடியாது.

மேலும், எங்கள் விடுதலைப் போராட்டத்தை சிங்களர்களை விட தமிழர்கள்தான் அதிகமாக எதிர்க்கிறார்கள். ஆனால் அந்த எதிர்ப்பாளர்களை நம்மவர்களாக விரைவில் மாற்றுவோம். அதற்கான ஒரு விதையாக இந்த புலிப்பார்வை படம் இருக்குமென்று நம்புகிறேன். இவவாறு சீமான் பேசினார்.

Related Posts