சீன ஜனாதிபதியிடம் புடின் பகிரங்கமாக வெளியிட்ட கருத்து

சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் வேகமான வளர்ச்சியை கண்டு ரஷ்யா சற்று பொறாமை கொண்டது என்று ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுடனான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-கின் அரசுப் பயணத்தின் தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின், முறைசாரா பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார். இதன்போது கடந்த ஆண்டுகளில், சீனா அதன் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் அவை நலன்களை ஏற்படுத்துகிறது மற்றும் இதனால் நாங்கள் சீனாவின் மீது பொறாமைப்படுகிறோம் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உக்ரைனில் கடுமையான நெருக்கடியை தீர்க்க சீனாவின் திட்டத்தை புடின் வரவேற்றுள்ளார்.

அதில் தீர்மானத்திற்கான தனது முன்மொழிகளை மரியாதையுடன் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புடின் கருத்துகளுக்கு பதிலளித்த சீன ஜனாதிபதி, சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் செழிப்பை அடைவதில் ரஷ்யா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts