சீன உதவியில் உருவாகும் கொழும்புத் துறைமுக நகரம் குறித்து மீளாய்வு!!

சீனாவின் உதவியுடன் கொழும்பில் உருவாக்கப்படும் துறைமுக நகரம் குறித்து இலங்கையின் புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக ‘ரொய்ட்டர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

Chinese port deal-city

சீன நிறுவனம் ஒன்று சுமார் ஒரு பில்லியன் ரூபா செலவில் அமைத்து வரும் இந்தத் துறைமுக நகரம் அமைக்கப்படுகின்றது.

இதற்கு மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்தத் துறைமுக நகரத்தினால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது. இது குறித்து அயல் நாடான இந்தியா கவலை வெளியிட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலின்போது இப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன இந்தத் துறைமுக நகர அமைப்புக்கு தாம் ஆதரவு அளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே இது குறித்து மீளாய்வு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts