சீன- இலங்கை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்து

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இலங்கை அரசாங்கமும், சீன மேர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனமும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பங்காளர்களாக மாறியுள்ளன.

தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டு எதிர்க் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல்வேறு அமைப்புக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.

இவ்வுடன்படிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்க பாராளுமன்றத்தில் அவகாசம் ஏற்படுத்தித் தருவதற்கு ஜனாதிபதி தலையிட வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சி கோரிக்கையொன்றையும் நேற்று வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts