சீனுராமசாமி இல்லையேல் நானில்லை! விஜயசேதுபதி உருக்கம்

ஸ்டுடியோ-9 புரொடக்சன்ஸ் ஆர்.கே. சுரேஷ் தயாரித்துள்ள படம் தர்மதுரை. சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜயசேதுபதி நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டான்கே, ராதிகா சரத்குமார், கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்பட பலர் நடித் துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

sethu-pathy

அப்போது விஜயசேதுபதி பேசுகையில்,

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிப்பதற்கு முன்பு, சினிமாவில் போராடி மனசு நொந்து போனேன். ஒருகட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்து ஒரு கம்பெனியில் வேலைக்கு சேருவதற்காக அப்ளிகேஷன் போட்டிருந்தேன். ஆனால் அதன்பிறகு ஒரு 6 நாள் கழித்து சீனுராமசாமி சார் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் மட்டும் அப்போது நடிக்க அழைக்காமல் இருந்திருந்தால், நான் நடிகராகியிருக்க மாட்டேன். என் ட்ரேக்கே மாறியிருக்கும். ஏதாவது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்திருப்பேன்.

மேலும், அந்த படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது நடி என்று சொன்னாலே நான் நடித்திருப்பேன். ஆனால் அவரோ, படத்தின் ஸ்கிரிப்ட்டை என்னிடம் கொடுத்து படிக்க சொல்லி கருத்து கேட்டார். நாம் அந்த கதை குறித்து ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்று அவர் ஆசைப்படுவார். அந்த அளவுக்கு மற்றவர்களின் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய நல்ல மனிதர் சீனு ராமசாமி. அதோடு, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நான் நடித்த பிறகு தான் சந்திக்கும் நபர்களிடமெல்லாம் விஜயசேதுபதி சூப்பராக நடிக்கிறார் என்று என்னைப்பற்றி சினிமா நண்பர்களிடம் பெருமையாக பேசி வந்தார். அதனால்தான் எனக்கு அடுத்தடுத்து படவாய்ப்பு கிடைத்தது.

அப்படி என்னை சினிமாவில் நடிகராக்கிய சீனுராமசாமி சாரே, இப்போது நான் அவருக்கு சான்ஸ் கொடுத்தது போன்று பேசுகிறார். ஆனால், உண்மை அதுவல்ல, அவர்தான் என்னை நடிகனாக்கினார். அவர் இல்லையேல் நான் நடிகனாகியிருக்கவே மாட்டேன். ஆக, என்னால் அவர் இல்லை. அவரால்தான் நான். மேலும், தென்மேற்கு பருவக்காற்று படத்தை அடுத்து அவர் இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்தேன். அந்த படம் சிலகாரணங்களால் இன்னும் வெளியாகவில்லை. இப்போது தர்மதுரையில் நடித்திருக்கிறேன். நகரத்தில் மருத்துவ படிப்பு படித்த ஒருவன் சொந்த கிராமத்துக்கு சென்று சேவை செய்கிறான். அப்போது அங்கு நடக்கும் சில விசயங்கள்தான் இந்த தர்மதுரை. எனது கேரியரில் இது முக்கியமான படம். எல்லா அம்சங்களும் உள்ள ஒரு தரமான படம் இது.

இவ்வாறு விஜயசேதுபதி பேசினார்.

Related Posts