சீனி மற்றும் பருப்புக்கு தட்டுப்பாடு ?

சீனி மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கப்படாத பட்சத்தில், இந்த பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக பட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்தின் காரணமாக, இறக்குமதி செய்யப்படுகின்ற விலையைக் காட்டிலும், குறைந்த விலையில் உள்நாட்டில் சந்தைப்படுத்த வேண்டி ஏற்படுகிறது. இதனை சமாளிக்க முடியாது என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் கே. நாதன் தெரிவித்துள்ளார்.

Related Posts