சீனி , தேங்காய் எண்ணெயின் பாவனையை குறைக்கவும்

பண்டிகைக் காலங்களில் சீனி மற்றும் தேங்காய் எண்ணெயின் பாவனையை குறைக்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

சமீப காலமாக இந்நாட்டில் நீரிழிவு உட்பட பல நோய்கள் உருவாகுவதற்கு பிரதான காரணியாக சீனி மற்றும் எண்ணெய் காணப்படுகின்றது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பாலித மஹீபால,சீனி பாவனைக்கு ஏற்ப குறித்த சுற்றறிக்கையினை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Posts