சீனிக்கு கட்டுப்பாட்டு விலை நீக்கம்

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு, அரசாங்கம் சம்மதித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவுச் செயற்குழுவே, இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளரொருவர், சீனிக்கான சில்லறை விலையாக, 93 ரூபாயைக் கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயித்த போதிலும், அந்த விலையில் சீனியை விற்பது, சாத்தியற்ற ஒன்றாக இருந்ததாகத் தெரிவித்தார்.

“அந்தக் கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நாங்கள் முயன்றோர். அது ஏற்கப்பட்டது. இது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல், விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

இதேவேளை, உள்ளூர் அரிசிக்கும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்குமென, இரு வேறான கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்க வேண்டாமெனவும் தாங்கள் கோரிய போதிலும், அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என, அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts