சீனாவில் பேருந்து விபத்தில் 38 பேர் பலி

சீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.தெற்கு சீனாவில் அமைந்துள்ள ஹுனான் மாகாணத்தில், எரிபொருளை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம், நீண்ட தூரம் செல்லும் பேருந்தின் மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டது.

accident_china

சனிக்கிழமையன்று நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் பின்னால் இந்த லாரி மோதியதில், லாரி தீப்பிடித்து வெடித்தது என ஜின்ஸுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை மூன்று மணியளவில் ஹுகுன் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் ஐந்து வாகனங்கள் சிக்கிக்கொண்டன.

தீயணைப்பு வாகனங்கள் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தன.

காயமடைந்த ஐந்து பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரித்துவருகிறது.

மோசமாக சாலைகள் பராமரிக்கப்படுவதால், இப்படி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது குறித்து, மக்கள் ஆத்திரமடைந்திருப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts