Ad Widget

சீனாவில் புதிதாக கட்டப்பட்ட கண்ணாடி பாலத்தில் கீறல்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜாங்ஜியாஜீ பகுதியில் யூண்டா மலைபகுதியில் உலகிலேயே மிக நீளமான, உயரமான கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கண்ணாடிப்பாலமானது இரண்டு உயரமான மலை உச்சிகளுக்கு இடையே அரை கிலோ மீட்டர் பகுதியில் 980 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

Chinas-newly.gif

இந்த பாலத்தின் தரைப்பகுதி கண்ணாடியினால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழேயுள்ள பள்ளத்தாக்கு பகுதியினை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த பாலத்திலிருந்து காலில் கயறு கட்டிக் கொண்டு குதிக்கும் பங்கி ஜம்ப் என்ற சாகசத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே நீளமான, உயரமான கண்ணாடி நடை பாலம் என்ற பெயரை இது தட்டிச் செல்ல இருக்கிறது. ஜாங்ஜியாஜீ தேசிய பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி நடை பாலம் பொதுமக்கள் உபயோகத்திற்காக கடந்த மாதம் 20 ந்தேதி திறக்கப்பட்டு உள்ளது.

இந்த பாலத்தின் மீது ஒரே நேரத்தில் 800 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த கண்ணாடி நடைபாலத்தின் மீது பேஷன் ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேசிய பூங்காவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் தூண்கள் உள்ளன என்பது மற்றொரு சிறப்பம்சம்.

இதுவரை உலகின் மிக உயரமான சாகச குதிப்பிற்கான இடமாக விளங்கிய மக்காவ் கோபுரத்தை ( 764 அடி) விட இந்த சீன கண்ணாடி நடைபாலம் உயரமானதென்ற பெருமை பெற இருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை அதிக அளவு பார்வையாளர்கதைதி தொடர்ந்து பார்வையாளர்கள் அந்த இடத்தில் இருந்து அகற்றபட்டனர்.

இது குறித்து யுன்டைசான் ரிசார்ட் அதிகாரபூர்வமாக சீன பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ள தகவலில் அதிகமான பார்வையாளர்களால் கண்ணாடி பாதை அடுக்குகளில் ஒன்றில் கீறல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கபட்டு உள்ளது.தற்போது கண்ணாடி பாலம் மூடபட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

Related Posts