சீனாவில் பரவும் வைரஸ் குறித்து பொதுமக்கள் கவலைப்பட வேண்டுமா?

சீனாவில் ஒரு மர்மமான வைரஸ் வெடிப்பை அடுத்து, இது COVID-19 தொற்றுநோயைப் போல உலகளவில் பரவக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் இன்னும் கவலை தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவில் பரவும் இந்த வைரஸ் ‘மனித மெட்டாப்நியூமோவைரஸ்’ (HMPV) என அழைக்கப்படுகிறது. குறிப்பாக வடக்குப் பகுதிகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே இந்த வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அறிகுறிகள் பெரும்பாலும் COVID-19 நோயின் அறிகுறிகளோடு ஒத்ததாக இருக்கும்.

இந்த வைரஸ் மற்ற நாடுகளை பாதிக்குமா அல்லது COVID-19 போன்ற தொற்றுகளை மீண்டும் உண்டாக்குமா என பற்றிய ஊகங்கள் பல உருவாகியுள்ளன.

இதே வேலை கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர், “இது தற்போது சீனாவில் மட்டுமே பரவுகிறது. இதுவரை இது பெரும் அச்சுறுத்தலாக கருதப்படவில்லை, ஆனால் இது மேலதிக கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்,” என கூறினார்.

மேலும் அவர், “COVID-19 மற்றும் HMPV க்கு இடையே எவ்வித வேறுபாட்டும் இருக்காது. இதனை வைரஸ் ஆய்வுகள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்,” என்றார்.

இருப்பினும், விமான நிலையங்களில் மற்றும் பிற நுழைவுப் புள்ளிகளில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார்.

இந்த வைரஸ் புதியதல்ல என்றும், பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி (Virology)நிபுணர் டாக்டர் ஜூத் ஜெயமஹா கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின் படி, சீனாவின் வடக்கு பகுதிகளில் பெரும்பாலான சுவாச நோய்த்தொற்றுகள் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸினால் ஏற்படுகின்றன. இதே போன்று, ரைனோவைரஸ், RSV மற்றும் HMPV போன்ற வைரஸ்களும் சிறிய அளவில் காணப்படுகின்றன. இந்த வைரஸ்கள் புதியவை அல்ல, மேலும் உலகளவில் பரவ வாய்ப்பில்லை.

“2001 ஆம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்ட HMPV, பொதுவாக இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தும். கடுமையான சந்தர்ப்பங்களில், இது மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியாவை ஏற்படுத்தலாம். இது குறிப்பாக இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள சுகாதார பிரச்சனைகள் கொண்டவர்களுக்கு அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தும்,” என்று அவர் விளக்கினார்.

“குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் பொதுவாக தோன்றுவது சாதாரணம். சீனாவில் தற்போது நிலவும் சூழல் கடந்த குளிர்காலத்தைவிட குறைவாக உள்ளது. 2013 ஆம் ஆண்டிலிருந்து, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் HMPV, RSV மற்றும் ரைனோவைரஸ் போன்ற வைரஸ்களை கண்காணித்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

இவை பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் கைகளைக் கழுவுதல், உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருப்பது போன்றவை பயனுள்ளதாக இருக்கும் எனவும், நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

HMPV க்கான குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை, ஆனால் பெரும்பாலான வழக்குகள் போதுமான ஓய்வுடன் ஒரு வாரத்திற்குள் சரி செய்யும் என்றும் அவர் கூறினார்.

Related Posts