சீனாவில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் 13 பேருக்கு மரண தண்டனை

சீன மேற்கு மாகாணமான ஸின்ஜியாங்கில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியமைக்காக 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
China-Executes-13

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24 பேர் பலியாவதற்கு காரணமாக அமைந்த தாக்குதல் உள்ளடங்கலாக 7 வழக்குகள் தொடர்பில் உய்குர் இனத்தவர்கள் உட்பட 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பீஜிங்கில் கடந்த வருடம் இடம்பெற்ற கார் விபத்து தொடர்பில் மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதக் குழுக்களுடன் பங்கேற்றமை, படுகொலை, தீ வைப்பு, கொள்ளை மற்றும் சட்டவிரோத உற்பத்தி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே மேற்படி 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 26ம் திகதி லுக்கின் நகரிலுள்ள பொலிஸ் நிலையம் ஹோட்டல்கள் ஏனைய தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்ததாக மூவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் 24 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பலியானதுடன் 23 பேர் காயமடைந்திருந்தனர்.

Related Posts